Saturday, June 27, 2026
No menu items!

Monthly Archives: June, 2024

மயிலத்தமடு பண்ணையாளர்களின் மேய்ச்சல்தரையை ஒப்படைக்க ஜனாதிபதி ரணில் மீண்டும் உத்தரவு…!!  

மயிலத்தமடு பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரையை ஒப்படைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கு மீண்டும் உத்தரவிட்டுள்ளார். அத்துடன், ஜுலை இரண்டாம் வாரம் மட்டக்களப்புக்கு விஜயம் செய்யும் தருணத்தில் பண்ணையாளர்களை நேரில் சந்தித்து உரையாடுவதற்கும் ஆர்வம் கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் சம்பந்தமாக ரணில் செயலணியின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...

சாதாரண தர பரீட்சையின் இரண்டாம் கட்ட மதிப்பீடு..!

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் இரண்டாம் கட்ட மதிப்பீட்டு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படமாட்டாது என பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இன்று(27.06.2024) ஆரம்பிக்கவிருந்த குறித்த பரீட்சையின் இரண்டாம் கட்ட மதிப்பீட்டு நடவடிக்கைகள் தவிர்க்க முடியாத காரணத்தினால் ஆரம்பிக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சாதாரண தர பரீட்சையின் இரண்டாம் கட்ட மதிப்பீட்டு நடவடிக்கைகள் நாளை (28.06) ஆரம்பிக்கப்படும்...

இரண்டு வங்கிகளுக்கு அபராதம்!!!

இலங்கையிலுள்ள இரண்டு தனியார் வங்கிகளுக்கு  இலங்கை மத்திய வங்கி அபராதம் விதித்துள்ளது. சம்பத் வங்கி பிஎல்சீ மற்றும் டிஎப்சிசி வங்கி பிஎல்சி ஆகிய இரண்டு வங்கிகளுக்கே மத்திய வங்கி இவ்வாறு அபராதம் விதித்துள்ளது. அதன்படி சம்பத் வங்கிக்கு இருபது இலட்சம் ரூபாயும், டிஎப்சிசி வங்கிக்கு பத்து இலட்சம் ரூபாயும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. நிதியியல் கொடுக்கல் வாங்கல் அறிக்கையிடல் சட்டம் மற்றும்...

கடன் மறுசீரமைப்பு உடன்பாடுகளை வெற்றிகரமாக நிறைவு செய்த  இலங்கை…!

இலங்கை நேற்று (26.06) முற்பகல் பெரிஸ் நகரில் தனது முக்கிய உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களுடன்  கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்துள்ளதுடன் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுடன் இறுதி இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவின் எக்ஸிம் வங்கியுடன் பீஜிங்கில் இலங்கை இன்று இறுதி இணக்கப்பாட்டை...

பதவி விலகிய இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர்…!!

இலங்கை தேசிய கிரிக்கட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக பணியாற்றிய இங்கிலாந்தின் கிறிஸ் சில்வர்வுட்  பதவியில் இருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது. இதேவேளை இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராக பணியாற்றிய இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தனவும் பதவி விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள பணிப்புரை…!!

ஜனாதிபதி தேர்தலுக்காக பணிபுரியும் அரச அதிகாரிகள் மற்றும் அதற்காக பயன்படும் அரச வாகனங்கள் தொடர்பில் கணக்கெடுப்பை மேற்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் R.M.A.L.ரத்நாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். இதற்கமைய எதிர்வரும் தேர்தலுக்கு பணிபுரியும்  அரச உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை மற்றும் அதில் பங்குபற்றக்கூடிய அதிகாரிகளின் எண்ணிக்கை தொடர்பில் உரிய ஆவணங்கள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு பல மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம்..!

நாட்டிற்கு தெங்கு உற்பத்தியின் ஏற்றுமதி மூலம் 203 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 6.9 வீத பங்களிப்பு தெங்கு உற்பத்திகளின் ஊடாக வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வருடத்தின் முதல் காலாண்டில் இந்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

நெடுந்தீவில் நடமாடும் சேவை..!!

சட்டத்திற்கும் மனித உரிமைகளுக்குமான நிலையமானது நேற்றைய தினம் (26.06) நெடுந்தீவுப் பிரதேச செயலகத்துடன் இணைந்து நடமாடும் சேவையை முன்னெடுத்திருந்தனர். நெடுந்தீவு பிரதேச செயலர் நிவேதிகா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நடமாடும் சேவை ஊடாக அடையாள அட்டைக்கான விண்ணப்பம் மற்றும் இலவச சட்ட ஆலோசனை ஆகியன வழங்கப்பட்டன. நிகழ்வில் சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின் பணிப்பாளர் திருமதி அம்பிகா...

வடபிராந்திய கடற்படை கட்டளைத் தளபதிக்கும், கௌரவ ஆளுநருக்கும் இடையில் சிநேகபூர்வ சந்திப்பு….

இலங்கை கடற்படையின் வடக்கு பிராந்திய கட்டளைத் தளபதி ரியல் அத்மிரல் ரோஹித்த அபேசிங்க, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை, ஆளுநர் செயலகத்தில் நேற்று (27/06/2024) சிநேகபூர்வ ரீதியாக சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். யாழ் குடாநாட்டு மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கும், தீவுப்பகுதி மக்களுக்கான மருத்துவ வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கும் இலங்கை கடற்படை முன்னெடுத்துள்ள...

பிரித்தானிய உயர்ஸ்தானிகர், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்…!!

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் அவர்களை, இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக் உள்ளிட்ட குழுவினர் நேற்று (26.06) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்ற நிலையில் மீள்குடியேற்றம், காணி விடுவிப்பு, தொழில் வாய்ப்புகள், போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது...
- Advertisement -spot_img

Latest News

 நாய் கொல்லப்பட்ட சம்பவம்: இருவர் கைது!

வத்துவ, பொதுபிட்டிய பகுதியில் உள்ள சதொச விற்பனை நிலையத்திற்கு முன்னால் கடந்த 2025-ம் ஆண்டு ஒகஸ்ட் 7-ம் திகதி நாய் ஒன்று கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான...
- Advertisement -spot_img