Saturday, June 27, 2026
No menu items!

Monthly Archives: June, 2024

கொலை வழக்கில் பிரதான சந்தேகநபர் கைது..!

அம்பலாங்கொட – பலப்பிட்டிய அவஸவத்தை சந்தியில் வைத்து வர்த்தக நிலைய உரிமையாள் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வாள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 25ஆம் திகதி இரவு இடம்பெற்ற இந்தக் கொலையில் தெற்கு தெல்வத்த பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய நான்கு பிள்ளைகளின்...

சஞ்சய் மஹவத்தவிற்கு விளக்கமறியல்..!

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ‘மகென் ரட்டட்ட’ அமைப்பின் தலைவர் சஞ்சய் மஹவத்த எதிர்வரும் ஜூலை மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு அளுத்கடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியதாக தெரிவித்து அவர் கைது செய்யப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட கைதிகள் தப்பியோட்டம்..!

வரகாபொல துல்ஹிரிய நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட இரு கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக வரகாபொல பொலிஸார் தெரிவிக்கின்றனர். குருவிட்ட சிறைச்சாலையில் இருந்து அழைத்து வரப்பட்ட இரு கைதிகள் கைவிலங்குகளுடன் தப்பிச் சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் இன்று 15 மணித்தியால நீர் வெட்டு..!

கொழும்பு, தெஹிவளை,கோட்டை, கடுவலை, மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ ஆகிய மாநகர சபைப் பகுதிகளுக்கும் கொட்டிகாஹவத்த, முல்லேரியா பிரதேச சபை பகுதிகளுக்கும் இன்று (29) நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.  

5% குறைக்கப்படவுள்ள பஸ் கட்டணங்கள் ..!

எதிர்வரும் முதலாம் திகதி முதல் பஸ் கட்டணங்களை 5 வீதத்தால் குறைக்க பஸ் சங்கங்கள் தீர்மானித்துள்ளன. போக்குவரத்து அமைச்சில் நேற்று (28) நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பஸ் சங்கங்களை சேர்ந்தவர்களும் தேசிய போக்குவரத்து ஆ​​ணைக்குழுவின் அதிகாரிகளும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தனர். புதிய பஸ் கட்டண திருத்தத்தின் பிரகாரம், குறைந்தபட்ச பஸ் கட்டணமாக 28 ரூபா அறிவிக்கப்பட்டுள்ளது.

8 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி – மன்னாரில் சம்பவம்…. !

மடு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் தரம் 4 ஐச் சேர்ந்த மாணவர்கள் 8 பேர் திடீர் சுகயீனம் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலையில் தரம் 4 இல் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் தனது வீட்டில் எண்ணை எடுப்பதற்காக காய வைத்திருந்த ஆமணக்கு விதைகளை பாடசாலைக்கு...

ஆமணக்கு சாப்பிட்டதால் ஏற்பட்ட ஒவ்வாமை !சிறுவர்களுக்கு நேர்ந்தக் கதி!

ஆமணக்கு சாப்பிட்டதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக 8 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தச்சமரடம் பகுதியில் நேற்று(28.06) பிற்பகல் இக்குழந்தைகள் ஆமணக்கு பருப்பை சாப்பிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  9 வயதுடைய ஆண் குழந்தையொன்றும் 7 பெண் குழந்தைகளும் உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவர்கள் மடு பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் என்பதுடன் மடு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு...

டெல்லி சர்வதேச விமான நிலையத்தின் கூரை கழன்று வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு; 6 பேர் காயம்..!

டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழைவீழ்ச்சி பதிவாகி வருகின்ற நிலையில், டெல்லி சர்வதேச விமான நிலையத்தின் கூரையின் ஒரு பகுதி கழன்று வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 6 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று (28) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், இடிபாடுகளில் எவரேனும் சிக்கி இருக்கிறார்களா என்பதை டெல்லி தீயணைப்பு படையினர் ஆய்வு செய்து வருகின்றனர். குறித்த...

மாதாந்த நிறைவேற்று கொடுப்பனவு 10,000 ரூபாவால் அதிகரிப்பு!அரச நிறைவேற்று அதிகாரிகளுக்கு..!

அரச நிறைவேற்று அதிகாரிகளுக்கு வழங்கப்படும் மாதாந்த நிறைவேற்று கொடுப்பனவை 10,000 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.   அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக, 15,000 ரூபாவாக காணப்பட்ட கொடுப்பனவு 25,000 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் புதிய...

துறைமுக நிர்மாணப் பணிகளுக்கான விலைமனு கோரப்பட்டுள்ளது..!

மன்னார் துறைமுக முனைய நிர்மாணப் பணிகளுக்கான விலைமனு கோரப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, மன்னார் துறைமுகத்தில் 300 மீட்டர் நீளமான முனையம் நிர்மாணிக்கப்படவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் K.D.S. ருவன்சந்திர தெரிவித்துள்ளார். இதற்காக உள்ளூர் முதலீட்டாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக அவர் கூறினார். முனையத்தின் நிர்மாணப் பணிகளின் பின்னர் இந்தியா...
- Advertisement -spot_img

Latest News

1 பில்லியன் டொலர் இழப்பு;ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பில் ஆய்வு

வங்கி அமைப்புகளுடன் தொடர்புடைய மோசடியின் காரணமாக இலங்கை கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை இழந்துள்ளது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெளிப்படுத்தியதைத்...
- Advertisement -spot_img