ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்புப் பேரணி எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்த பேரணியில் ஏராளமான மக்கள் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் இந்த பேரணியில் கலந்து கொள்ளவுள்ளதாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

மகிந்த ராஜபக்ச தனது பிறந்தநாளை முன்னிட்டு கண்டியில் உள்ள புனித தலதா மாளிகையில் ஆசீர்வாதம் பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

அதாவது, “தற்போதைய அரசாங்கம் மேற்கொள்ளும் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்க்க, மக்கள் அணிதிரள வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here