போராட்டம் ஒன்று காரணமாக பத்தரமுல்லை, பொல்துவ சந்தியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் பொல்துவ சந்தியிலிருந்து பாராளுமன்றம் நோக்கிய வாகன போக்குவரத்தையும் பொலிஸார் தற்காலிகமாக மூடியுள்ளனர்.

“ஜனநாயகத்தை அழிக்கும் 22 வேண்டாம்” என்ற தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சக்தியால் இன்று காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டம் காரணமாக இவ்வாறு வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தற்போது பத்தரமுல்லை பகுதியில் மழை பெய்து வரும் நிலையில், மழையையும் பொருட்படுத்தாமல் கறுப்பு பட்டி அணிந்து போராட்டக்காரர்கள் பொல்துவ சந்தியில் கூடியுள்ளனர்.

போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவர்சஜித் பிரேமதாச உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here