நாடு முழுவதும் 3 லட்சம் ஸ்மார்ட் மின் மீட்டர்களை நிறுவும் பரிசோதனை திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த திட்டத்தை அடுத்த 2 ஆண்டுகளில் Electricity Distribution Lanka Pvt Ltd நிறுவனம் செயல்படுத்தவுள்ளது.

வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு இந்த அனுமதி கிடைத்துள்ளது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை வலுப்படுத்தும் நோக்கில், ஆசிய அபிவிருத்தி வங்கியின் சிறு நிதி வசதி மூலம் 15 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெறுவதற்கு கடந்த ஆண்டு அக்டோபர் 21 அன்று அமைச்சரவை ஏற்கனவே அனுமதி வழங்கியிருந்தது.

அவற்றில்  12.5 மில்லியன் டொலர் நிதியை பயன்படுத்தி, “Time of Use” அதாவது பயன்படுத்தும் நேரத்திற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கும் முறையுடன் கூடிய ஸ்மார்ட் மீட்டர்கள் Smart Meter நிறுவப்படவுள்ளன.

இது நாட்டின் மின் கட்டமைப்பை நவீனமயமாக்கும் ஆரம்பகட்ட நடவடிக்கையாக அமையும் என அரசு தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here