Thursday, April 30, 2026
No menu items!

கெமுனு விஜேரத்ன

3,000 குறுகிய தூரப் பேருந்துகள் சேவையில் இருந்து விலகும் அபாயம்..!

அரசாங்கத்தின் திட்டமிடப்படாத வாகன இறக்குமதியால், அடுத்த ஆண்டுக்குள் சுமார் 3,000 குறுகிய தூரப் பேருந்துகள் சேவையில் இருந்து விலகும் அபாயம் உருவாகியுள்ளது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன எச்சரித்துள்ளார். இது தொட்ர்பில் அவர் கூறுகையில், திட்டமற்ற வாகன இறக்குமதி காரணமாக வீதிகளில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக அதிகரித்துள்ளது. இதனால், பேருந்துகளின்...

கடலோரப் பேருந்து சாரதிகள், நடத்துநர்கள் பணியில் போதைப்பொருள் பயன்படுத்துகின்றனர் – கெமுனு விஜேரத்ன குற்றச்சாட்டு!

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன, கடலோரப் பாதையில் இயங்கும் பேருந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் பணியில் இருக்கும் போதே போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார். கஞ்சா மற்றும் ‘ஐஸ்’ வகை போதைப்பொருட்கள் கடலோரப் பகுதிகளில் எளிதில் கிடைக்கின்றன என்றும், சிலர் அவற்றை பேருந்துகள் மற்றும் பிற வாகனங்கள் மூலம் கொண்டு...

நீண்ட தூர பேருந்துகளுக்கு கட்டாய பரிசோதனை – அரசாங்கத் திட்டத்திற்கு பேருந்து சங்கங்கள் எதிர்ப்பு!

அரசாங்கம், நீண்ட தூர சேவைகளில் ஈடுபடும் அனைத்து பேருந்துகளும் பயணத்திற்கு முன் அடிப்படை தர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என அறிவித்துள்ளது. ஆனால், இத்திட்டத்திற்கு பேருந்து சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. உரிய ஆய்வு இல்லாமல் முடிவெடுக்கக் கூடாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன கூறியுள்ளார். திட்டம் சரியான வழிமுறைகள் இன்றி...

பேருந்து கட்டணம் குறித்து வெளியான அறிவிப்பு..!

டீசல் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டிருந்தாலும், பேருந்து கட்டணத்தில் எந்த திருத்தமும் செய்யப்படாது என்று இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகள்..!

தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தங்களது சொந்த இடங்களுக்குப் பயணிப்பவர்களுக்காக கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து விசேட போக்குவரத்து சேவைகள் இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளன. இலங்கைப் போக்குவரத்து சபையும், தொடருந்துத் திணைக்களமும் இணைந்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளன. இந்தநிலையில், இலங்கைப் போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 350 பேருந்துகள் மேலதிகமாக இன்று முதல் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. இதேவேளை,...

பேருந்து கட்டணம் அதிகரிக்கும் வாய்ப்பு..!

ஜூலை மாதத்தில் பேருந்து கட்டணம் கணிசமாக அதிகரிக்கும் என்று இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இன்று (01/04/2025) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், பேருந்துகள் ஏற்கனவே மூன்று ரூபாய் நஷ்டத்தில் இயக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். கூடுதலாக, அரசாங்கம் விதித்துள்ள புதிய வரி விகிதங்களின் கீழ் பேருந்துகளின் விலைகளும் அதிகரித்துள்ளதாகவும், பேருந்துகளில் வற்...

எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும்- சேவையிலிருந்து பேருந்துகள் விலக்கிக் கொள்ளப்படும் கெமுனு விஜேரத்ன..!

தற்போதைய சூழ்நிலையில், எரிபொருள் பிரச்சினை நாளைய தினத்துக்குள் முறையாக தீர்க்கப்படாவிட்டால், தங்களது பேருந்துகள் சேவையிலிருந்து விலக்கிக் கொள்ளப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் தரவுகளின் அடிப்படையில் நாடு முழுவதும் தேவையான அளவுக்கு அதிக எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ.ராஜகருணா  தெரிவித்தார். இந்தநிலையில் இலங்கை...

எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் – அவசரக் கோரிக்கை..!

எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டால் பொது போக்குவரத்தை சீராக பராமரிக்க இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்களில் இருந்து போதுமான டீசல் விநியோகத்தை உறுதி செய்ய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் (LPBOA) தலைவர் கெமுனு விஜேரத்ன  தெரிவித்துள்ளளார். ”நாட்டின் போக்குவரத்து அமைப்பு சீர்குலைந்து விடக்கூடாது. ஏனெனில் இது பொருளாதாரத்தை...

பேருந்து கட்டணத்தில் அதிரடி அதிகரிப்பு..!

எரிபொருள் விலையை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் தீர்மானம் எதனையும் எடுக்காமையின் காரணமாக, ஜூலை மாதம் இடம்பெறவுள்ள கட்டண திருத்தத்தின் போது பேருந்து கட்டணம் மேலும் அதிகரிக்கப்படும் என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. வாகன உதிரிப்பாகங்களுக்கான விலை அதிகரித்துள்ளமையின் காரணமாக, தாம் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு...

பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது; கெமுனு விஜேரத்ன…!

ஒரு லீற்றர் டீசலின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணத்தை குறைக்க முடியாதென இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். விலைச் சூத்திரத்தின் பிரகாரம் பஸ் கட்டணத் திருத்தம் அமுல்படுத்தப்படுமெனத் தெரிவித்த விஜேரத்ன, விலைத் திருத்தத்திற்கு 4 வீதமான சூத்திரத்தின் தாக்கம் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். 10 ரூபாவினால்...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img