களு கங்கையின் நீர்மட்டம் தொடர்ச்சியாக உயர்வடைந்துள்ளதால், இரத்தினபுரி மற்றும் மில்லகந்த பகுதிகளில் வெள்ள அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது.

திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்படுவதாவது,
“நீர்மட்டம் தற்போது எச்சரிக்கை மட்டத்தைக் கடந்து உயர்ந்து வருவதால், குறித்த பகுதிகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை தொடர்ந்தால் நிலைமை மோசமடையக்கூடும்  என்பதால், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here