மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் எண்ணெய் அடங்கிய, ‘சீ அட்வென்ச்சர்’ என்ற சரக்கு கப்பலில் நேற்று மாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

அந்தக் கப்பல் சுமார் 30,000 மெட்ரிக் தொன் எரிபொருளை ஏற்றிச் செல்கிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கொலன்னாவை எண்ணெய் சேமிப்பு வளாகத்திற்கு குறித்த எரிபொருள் இருப்பை மாற்றும் பணி இடம்பெறுவதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

குறித்த எரிபொருள், நாட்டில் நடைபெற்று வரும் மின்சார உற்பத்தித் தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here