37 ஆவது காவல்துறை மா அதிபர் நியமனம் குறித்து கலந்துரையாடுவதற்காக அரசியலமைப்பு பேரவை நாளை கூடவுள்ளது.
தேசபந்து தென்னகோன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, காவல்துறை மா அதிபர் பதவிக்கு, தற்போதைய பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பெயரை முன்மொழிந்துள்ளார்.
இந்த நிலையில், ஜனாதிபதியின் முன்மொழிவு தொடர்பில் கலந்துரையாடி இறுதி முடிவை எடுப்பதற்காக அரசியலமைப்பு பேரவை நாளை பிற்பகல் 1:30 க்கு சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது.








