இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர்.
இதன் மூலம், அவர்கள் இனி டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இருவரும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவதைத் திட்டமிட்டுள்ளனர். ஆனால், 2027 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கிண்ணத் தொடரில் இவர்களின் பெயர்கள் இல்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய அணி எதிர்வரும் அக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெறும் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. அத்தொடர், ரோகித் மற்றும் விராட் இருவருக்கும் சர்வதேச கிரிக்கெட்டில் கடைசி போட்டியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.








