
40 அபாயமான மரங்களினால் பாடசாலை மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல்!!!
தலைநகர் கொழும்பில் பிரதான பாடசாலைகளுக்கு அருகில் ஆபத்தான 40 மரங்கள் காணப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் கொழும்பு மாநகர சபைக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக அகில இலங்கை மாவட்ட பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் என். எம்.கே.ஹரிச்சந்திர பத்மசிறி தெரிவித்துள்ளார்.
பாடசாலை நிறைவடைந்தவுடன் மாணவர்கள் தமக்காக வருகைத்தரும் போக்குவரத்து வாகனம் இவ்வாறு ஆபத்தான மரங்களுக்கு கீழ் தரித்து நிற்பதாகவும் இதனால் அவர்களுடைய உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன் மீது மரமொன்று முறிந்து விழுந்தால் காப்பீடு மூலம் அதனை மீளமைக்க முடியும் எனினும் பாடசாலை மாணவர் ஒருவர் மீது மரம் முறிந்து விழுந்தால் அது பெற்றோர்களுக்கு மீளப் பெற முடியாத நட்டம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.