நடிகை திரிஷா இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு குறித்து தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகின்றது.

நடிகை த்ரிஷா

தமிழ் சினிமாவில் இளவரசி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் திரிஷா. 2002 ஆம் ஆண்டு வெளியான மௌனம் பேசியதே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் கதாநாயகியாக அறிமுகி,தொடர்ந்து இன்று வரையில் கதாநாயகியாகவே தன்னை தக்கவைத்துக்கொண்டுள்ளார்.

சினிமாவில் அறிமுகமாகி 22 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டாலும், இன்றளவும் அதே இளமையுடன் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

அஜித், திரிஷா நடிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனை தொடர்ந்து த்ரிஷ் மற்றும் அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் அண்மையில் வெளியாகி வசூல் ரீதியில் பட்டையை கிளப்பியது.

இந்நிலையில் திரிஷா இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்த வண்ணம் இருக்கின்றது.

இந்த நிலையில்  நடிகை த்ரிஷாவின் சொத்து மதிப்பு குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, த்ரிஷாவின் சொத்து மதிப்பு ரூ. 130 கோடி என கூறப்படுகிறது. இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 10 கோடி முதல் ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.

அதுமட்டுமன்றி  இவருக்கு சொந்தமாக சென்னை மற்றும் ஐதராபாத்தில் சொகுசு வீடுகள் உள்ளன. அதன் மதிப்பு மட்டும் ரூ.16 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இவரிடம் பென்ஸ், பி.எம்.டபுள்யூ, ரேஞ்ச் ரோவர் போன்ற விலையுயர்ந்த சொகுசு கார்களும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here