சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 மாணவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 16 ஆம் திகதி வரை குறித்த 4 மாணவர்களையும் விளக்கமறியலில் வைக்க பலாங்கொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், மன அழுத்தம் காரணமாக உயிர்மாய்த்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக குறித்த நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.








