கீதா குமாரசிங்க உட்பட 5 இராஜாங்க அமைச்சர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கியுள்ளார்.
ஏனையவர்களில் சஷீந்திர ராஜபக்ஷ, அமித் தேனுக விதானகமகே, பிரசன்ன ரணவீர மற்றும் டி.வி.சானக்க ஆகியோர் அடங்குவர். அரசியலமைப்பின் 47 (3) (a) பிரிவின் கீழ் இவ் நீக்கங்கள் செய்யப்பட்டன என தெரிவிக்கப்படுகிறது.








