இலங்கையின் யால தேசிய பூங்காவில் இருந்து 92 வகையான பட்டாம் பூச்சிகளை திருடிய இத்தாலி நாட்டு பிரஜைகளான தந்தை மற்றும் மகனுக்கு 60 மில்லியன் இலங்கை ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பட்டாம் பூச்சிகள் கொண்ட ஜாடிகளுடன் சரணாலய அதிகாரிகளினால் கடந்த மே மாதம் 8ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைது செய்து அவர்களை விசாரணை நடத்தியதில், அரிய வகை பட்டாம் பூச்சிகளை பிடித்து அதை நவீன தொழிநுட்ப முறை கொண்டு மெழுகாக்கி உறையவைத்து விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், பட்டாம் பூச்சிகளை சட்டவிரோதமாக சேகரித்தல், வைத்திருத்தல் மற்றும் கொண்டு செல்லுதல் ஆகிய குற்றங்களுக்காக அவர்களுக்கு வனவிலங்கு குற்றங்களுக்காக இதுவரை இல்லாத அளவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
செப்டம்பர் 24 ஆம் தேதிக்குள் அபராதத்தைச் செலுத்தத் தவறினால் அவர்கள் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்கள் இத்தாலியின் வடக்கில் உள்ள மொடெனாவில் உள்ள பூச்சியியல் சங்கத்தின் உறுப்பினராகவும் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.








