கிளிநொச்சி மாவட்டத்தில் 97.2 சதவீதமான காணிகளில் கண்ணிவெடியகற்றல் செயற்பாடுகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகக் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர், போரினால் பாதிக்கப்பட்ட 37 குடும்பங்கள் மாத்திரமே இன்னும் மீள் குடியமர்த்தப்படாமல் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் ஓகஸ்ட் மாதமளவில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பிரதேசங்களில் மக்களை மீள் குடியமர்த்த முடியும் எனவும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here