ஜூலை மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு நாளை (ஜூலை 30) முதல் அஸ்வெசும (Aswesuma) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

இந்த மாதத்திற்காக 600,768 பயனாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு மொத்தமாக ரூ.3,003,840,000 வழங்கப்பட உள்ளது.

தகுதி பெற்ற பயனாளிகள் நாளை முதல் தங்களது அஸ்வெசும பயனாளி வங்கிக் கணக்குகளில் இந்த கொடுப்பனவை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் சபை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here