நாணயத்தாள் அச்சிடுவது நாட்டில் பணவீக்கத்தை அதிகரிக்க வழிவகுக்காது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந் நிலையில் தற்போதைய அரசு பொருளாதாரத்தை நிலைப்படுத்தி, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பயனுள்ள நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என போக்குவரத்து பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

அமைச்சர் குறிப்பிட்டதாவது, நாட்டின் பொருளாதார தேவைகளுக்கேற்ப ஒவ்வொரு ஆண்டும் நாணயத்தாள் அச்சிடுதல் நடைபெறுகின்றது.

கடந்த 6 மாதங்களில் வருமானம் மற்றும் செலவுகளுக்கு இடையிலான இடைவெளி 33% குறைவடைந்துள்ளது. கடந்த ஆண்டு முதல் பாதியில் அரச வருமானம் 1.8 டிரில்லியன் ரூபாய்களிருந்தது, இது இவ்வாண்டில் 2.3 டிரில்லியன் ரூபாய்களாக 24.7% அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், செலவும் குறைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here