செப்டம்பர் 14ஆம் திகதி நடைபெற்ற இந்தியா–பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் போது இடம்பெற்ற விதிமீறல் சம்பவம் தொடர்பில், சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) உரிய விசாரணை நடத்த ஒப்புக்கொண்டுள்ளது.

இந்தியா, போட்டி முடிந்தபின் பாகிஸ்தான் அணியுடன் கைகுலுக்க மறுத்ததற்கான குற்றச்சாட்டு எழுந்த நிலையில், போட்டி நடுவராக இருந்த எண்டி பைகிராப்ட் அதனை எதிர்க்கவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து எண்டி பைகிராப்ட் மன்னிப்பு கோரி, சம்பவம் தவறான தகவல் தொடர்பால் ஏற்பட்டது என விளக்கம் வழங்கியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையிடமும், அணித் தலைவரிடமும் அவர் நேரடியாக மன்னிப்பு கோரியுள்ளார்.

இதற்கிடையில், பாகிஸ்தான் அணி இன்று (17) ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்றது.

நாணய சுழற்சியில் ஐக்கிய அரபு இராச்சியம் அணி வென்றதால், முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவு செய்தது. இதன்படி பாகிஸ்தான் அணி துடுப்பெடுத்தாடத் தொடங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here