ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள இன்று (செப்டம்பர் 22) உத்தியோகபூர்வ விஜயத்திற்காக அமெரிக்காவிற்கு புறப்பட்டுள்ளார் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி, ஐ.நா. செயலாளர் நாயகம் உட்பட பல்வேறு உலகத் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் செப்டம்பர் 24ஆம் திகதி, அமெரிக்க நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்கு, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையில் உரையாற்றவுள்ளார்.








