அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்துள்ள போதிலும், மக்கள் கவனிக்கத்தக்க எந்தவொரு வளர்ச்சிப் பணியும் மேற்கொள்ளப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் பிறந்தநாளை முன்னிட்டு களுத்துறையில் நேற்று (21) நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

“ஒரு வருட ஆட்சியில், மக்கள் உணரக் கூடிய எந்த மாற்றத்தையும் அரசாங்கம் கொண்டு வரவில்லை,” என அவர் தெரிவித்துள்ளார்.

விஜேராம இல்லத்தில் இருந்து தங்காலைக்கு சென்ற பின்னர், மஹிந்த ராஜபக்ஷ வெளியில் பங்கேற்றும், பொது மக்களை சந்தித்தும் நடைபெறும் முதல் நிகழ்வு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here