வாகனங்களுக்காக மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு தரவுகளுடன் கூடிய புதிய இலக்க தகடுகள், எதிர்வரும் நவம்பர் 15ஆம் திகதிக்குள் வழங்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (26) நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
இதற்கான அனைத்து ஒப்பந்த அழைப்புகள் (tender process) நிறைவடைந்துள்ளன என்றும், புதிய தகடுகள் முந்தையவற்றைவிட தொழில்நுட்ப ரீதியாக முன்னேறியவையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
வாகன எண் தகடுகளின் பாதுகாப்பு மற்றும் தரநிலையை உயர்த்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.








