ரந்தெனிகல பிரதான பாதையில், ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் 12 பயணிகள் காயமடைந்துள்ளனர்.

 நேற்று (30/09) இரவு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

பேருந்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறினால்  பேருந்து பாதையை விட்டு விலகி பாதையோரப் பாறைக் கட்டில் மோதியுள்ளது.

காயமடைந்த 12 பேர் கந்தகெட்டிய  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here