நீண்டதூர சேவை வழங்கும் பேருந்துகள் பயணிகள் தேநீர் அருந்துவதற்காக இடைநிறுத்தம் செய்யும் உணவகங்களில் உணவு மற்றும் பானங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதைத் தடுக்க, பொதுமக்கள் முறைப்பாடுகள் செய்யுமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை (Consumer Affairs Authority) அறிவுறுத்தியுள்ளது.

அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படும்போது, “1977” என்ற துரித தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து முறைப்பாடு செய்யலாம் என அதிகாரசபை கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த அறிவுறுத்தல், பெந்தலுவ – பரகடுவ பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில், தண்ணீர் போத்தல்கள் உள்ளிட்ட பொருட்கள் அதிக விலையில் விற்கப்பட்டமை தொடர்பான முறைப்பாட்டைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here