எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும், பேருந்துப் பயணக் கட்டணத்தில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொதுப் போக்குவரத்து கட்டணங்களில் மாற்றம் ஏற்படுத்த, டீசல் விலை குறைந்தபட்சம் நான்கு சதவீதத்தால் குறைய வேண்டும் எனப் ஆணைக்குழு நினைவூட்டியுள்ளது. ஆனால், தற்போதைய எரிபொருள் விலை திருத்தம் 1.58 சதவீத குறைப்பையே பிரதிபலிக்கிறது என்றும், இது கட்டண திருத்தத்திற்கு போதுமானதாக இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், பேருந்து பயணக் கட்டணங்களில் எந்தவிதமான குறைப்பும் மேற்கொள்ளப்படாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதேவேளை, நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்த எரிபொருள் விலை திருத்தத்தின்படி, டீசல் விலை ரூ.6 குறைக்கப்பட்டு, புதிய விலை ரூ.277 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here