ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு காசாவில் ஏற்பட்ட பேரழிவை மதிப்பீடு செய்துள்ளது.

காசாவின் 80% கட்டிடங்கள் அழிக்கப்பட்டு சேத மதிப்பு 4.5 டிரில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இடிபாடுகளை அகற்ற 10 ஆண்டுகள், வளமான விவசாய நிலங்களை மீட்டெடுக்க 25 ஆண்டுகள் தேவைப்படும்.

போரினால் காசாவின் 94% மருத்துவமனைகள் மற்றும் 90% பாடசாலைகள் அழிக்கப்பட்டு, 90% மக்கள் வீடற்றவர்களாக மாற்றப்பட்டுள்ளனர். 1,500 ஏக்கர் விவசாய நிலைகளில் 98.5% பயன்பாட்டுக்கு முடியாத நிலையில் உள்ளது; பாசனக் கிணறுகளில் 83% சேதம் ஏற்பட்டுள்ளது.

மண்ணின் இரசாயன அளவு மூன்று மடங்காக அதிகரித்து, உணவுப் பாதுகாப்புக்கு ஆபத்து உருவாகியுள்ளது. போரின் விளைவுகள் சமூகம், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பல தசாப்தங்களுக்கு நீடிக்கும்.

இதுவரை 66,158 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்; பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகள். ஐ.நா. சுயாதீன விசாரணை ஆணைக்குழு, காசாவில் இஸ்ரேல் செயற்பாடுகளை இனப்படுகொலை என வரையறுத்துள்ளது.

அதிகாரப்பூர்வ அமைதிக்கான பேச்சுவார்த்தைகள் அமெரிக்கா மற்றும் எகிப்தியில் நடைபெற்று வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here