உலக சுகாதார அமைப்பின் தென் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைக் கொண்ட பிராந்தியத்தின் 78வது மாநாடு இன்று (13) முதல் 15ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ளது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை இலங்கை நடத்துகிறது.

இந்த மாநாட்டில், உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ், தென்கிழக்கு ஆசிய பிராந்திய பொறுப்பதிகாரி கத்ரீனா போஹ்மே, 8 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சுகாதார அமைச்சர்கள், இரண்டு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்கள் மற்றும் உலக சுகாதார அமைப்பின் பிற வல்லுநர்கள் பங்கேற்கின்றனர்.

மாநாட்டின் முக்கிய நோக்கமாக, எதிர்வரும் ஆண்டுகளுக்கான பிராந்திய சுகாதார நிகழ்ச்சி நிரல் உருவாக்கப்படவுள்ளது. இதில் வலுவான முதன்மை சுகாதார சேவைகள் மூலம் ஆரோக்கியமான முதுமையை அடைவது, புகையிலை இல்லாத சூழலுக்கு எதிரான போராட்டம், தென் மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்திய சுகாதார அவசர நிதியத்தின் விரிவாக்கம், நுண்ணுயிர் எதிர்ப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துதல் ஆகியவை முக்கிய அம்சங்களாகும்.

பங்கேற்பாளர்கள், முந்தைய ஆண்டுகளின் தீர்மானங்களின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்து, முக்கிய சுகாதார பிரச்சினைகள் தொடர்பான புதிய தீர்மானங்களை எட்டுவார்கள். இதன் மூலம் அனைத்து மக்களின் சுகாதார நிலை மேம்பாடு, பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகள் மீண்டும் வழமைக்கு கொண்டுவரப்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here