நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடம் பெற்ற அமர்வில் மருந்துப் பொருட்களுக்கான விலை நிர்ணய சூத்திரத் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது .

இது பல்வேறு வகை மருந்துகளுக்கு அதிகபட்ச விலை வரம்புகளை அறிமுகப்படுத்துவதற்கு வழி வகுக்கிறது  என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்  டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ  தெரிவித்துள்ளார்.

மேலும் இது அத்தியாவசிய மருந்துகளின் நியாயமான விலை நிர்ணயம் மற்றும் பொதுமக்களுக்கு அணுகலை உறுதி செய்வதை புதிய விதிமுறைகள் நோக்கமாகக் கொண்டுள்ளன என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், ‘சுவசெரிய’ ஆம்புலன்ஸ் சேவையின் பெயரிலோ அல்லது நிறத்திலோ எந்த மாற்றமும் இருக்காது என்றும் அமைச்சர் உறுதியளித்தார்  .

இது இலவச அவசர மருத்துவ சேவையின் நேர்மை மற்றும் அடையாளத்தைப் பேணுவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here