அநுராதபுரம் தலாவை ஜயகங்க சந்திப் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை தலாவ வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தலாவப் பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களும் அடங்குவதாகப் பொலிஸார் கூறியுள்ளனர்.

தற்போது காயமடைந்தவர்கள் தம்புத்தேகம மற்றும் தலாவ வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here