சுமார் 4 கோடி ரூபாய் பெறுமதியான “குஷ்” ரக போதைப்பொருளுடன் இலங்கைக்கு வந்த மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்
மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து நாட்டை வந்தடைந்த இவர்களிடம் இருந்து, சுமார் 4.22 கிலோகிராம் “குஷ்” போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.








