நாட்டில் தினசரி சராசரியாக 25 கணினி குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகுவதாக, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

இன்று (20) பாராளுமன்றத்தில் நடைபெற்ற வரவு–செலவுத் திட்ட விவாதத்தில் கேள்விக்கு பதிலளித்த அவர், குறிப்பாக வடக்கு மாகாணத்தில் இவ்வாறான சைபர் குற்ற முறைப்பாடுகள் கணிசமாக அதிகரித்துள்ளன என்றும் கூறினார்.

அவர் வழங்கிய வடக்கு மாகாணத்தில் பதிவான சைபர் குற்ற விவரங்கள் பின்வருமாறு:

  • 2020: 24
  • 2021: 577
  • 2022: 654
  • 2023: 472
  • 2024: 1,539

மேலும், 2025 அக்டோபர் 31 வரை மட்டும் 2,368 சைபர் குற்ற முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், நாட்டின் பல மாவட்ட பொலிஸ் தலைமையகங்களில், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் கணினி குற்ற விசாரணை உப பிரிவுகள் நிறுவப்பட்டுள்ளதாகவும் அவர் சபையில் அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here