ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இன்று (24) தனது 57வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
1968 நவம்பர் 24ஆம் திகதி பிறந்த அவர் தனது ஆரம்பக் கல்வியை தம்புத்தேகம ஆரம்ப பாடசாலையில் ஆரம்பித்தார்.

பின்னர் தம்புத்தேகம மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வியைத் தொடர்ந்து, உயர்தரத்தில் கணிதப் பிரிவில் பயின்றார். 1992ஆம் ஆண்டு களனி பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் சேர்ந்த அவர், 1995ஆம் ஆண்டு விஞ்ஞானப் பட்டம் பெற்றார்.

1987ஆம் ஆண்டு முற்போக்கு மாணவர் சங்கத்தின் செயற்பாட்டாளராக இணைந்த அவர், மக்கள் விடுதலை முன்னணியின் மூலம் இடதுசாரி அரசியலில் குறிப்பிடத்தக்க பங்காற்றினார்.

2019ஆம் ஆண்டில் தேசிய மக்கள் கட்சியை நிறுவி புதிய அரசியல் தளத்தை உருவாக்கினார்.

2023 செப்டம்பர் 21ஆம் தேதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று, இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவியேற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here