சங்கானை, சண்டிலிப்பாய் மற்றும் காரைநகர் பிரதேச மக்களின் போக்குவரத்து சிரமங்களை கருத்தில் கொண்டு, 782 வழித்தட அரச பேருந்து சேவையில் புதிய இணைப்பு ஒன்றை இலங்கை போக்குவரத்து சபை அறிமுகப்படுத்தியுள்ளது.
கொழும்பு – காரைநகர் இடையே இயக்கப்படும் அரச பேருந்து, கொழும்பிலிருந்து பயணித்து அதிகாலை 5.00 மணியளவில் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை அடையும். அங்குள்ள பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்குச் செல்லும்.
அதன் பின்னர், வழமைபோல் காலை 5.50 மணிக்கு காரைநகர் நோக்கி பயணத்தை தொடரும்.
மேலும், பி.ப 6.20 மணிக்கு பேருந்து மீண்டும் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை சென்றடைந்து அங்குள்ள பயணிகளை ஏற்றி காரைநகர் நோக்கி பயணிக்கும் என்று காரைநகர் அரச போக்குவரத்து சாலை முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
புதிய இந்த சேவை இன்று (24) முதல் அமுலுக்கு வருகின்றது.








