10-வது ஐசிசி ஆண்கள் இருபதுக்கு 20 (T20) உலகக்கோப்பை தொடரை இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தவுள்ளன.

இத்தொடர் 2026 பெப்ரவரி 7 முதல் 29 நாட்கள் நடைபெற உள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன.

நடப்பு சம்பியனான இந்தியா தனது முதல் போட்டியில் அமெரிக்காவை மும்பையில் எதிர்கொள்கிறது. தொடக்க நாளில் இந்தியா உட்பட ஆறு அணிகள் களமிறங்கும்.

குழு A-வில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இணைக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா–பாகிஸ்தான் மோதல் பெப்ரவரி 15-ஆம் திகதி கொழும்பில் நடைபெறும்.

போட்டிகள் நடைபெறும் மைதானங்களாக,

இந்தியா – 5 மைதானங்கள்

நரேந்திர மோடி மைதானம் (அஹமதாபாத்)

சேப்பாக்கம் (சென்னை)

அருண் ஜெட்லி மைதானம் (டெல்லி)

வான்கடே (மும்பை)

ஈடன் கார்டன்ஸ் (கொல்கத்தா)

இலங்கை – 3 மைதானங்கள்

ஆர். பிரேமதாச மைதானம்

SSC மைதானம்

பல்லேகல சர்வதேச மைதானம்

அட்டவணை

பெப்ரவரி 7 – 20 : குழு சுற்று (40 போட்டிகள்)

குழுவில் முதல் இரண்டு அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும்

சூப்பர் 8 : பெப்ரவரி 21 முதல்

அரையிறுதிகள் : கொழும்பு/கொல்கத்தா மற்றும் மும்பை

இறுதிப்போட்டி : மார்ச் 8 – அஹமதாபாத் அல்லது கொழும்பில்

தகுதி பெற்ற 20 அணிகளாக,

இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, மே.இந்திய தீவுகள், அயர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், கனடா, இத்தாலி, நெதர்லாந்து, நமீபியா, சிம்பாப்வே, நேபாளம், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் காணப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here