இலங்கையின் நிதி அமைச்சின் கணினி அமைப்பின் ஊடாக 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தற்போது சர்வதேச நாணய நிதியம் (IMF) அவதானம் செலுத்த தொடங்கியுள்ளது.

இந்த விடயத்தை உன்னிப்பாக அவதானித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் பிரபல ஊடகத்திடம் உறுதிப்படுத்தியுள்ளது.

டிசம்பர் 2025 முதல் ஜனவரி 2026 வரையிலான காலகட்டத்தில், ஹேக்கர்கள் நிதி அமைச்சின் கணினி அமைப்பிற்குள் ஊடுருவி அவுஸ்திரேலிய நிறுவனம் ஒன்றுக்கு திருப்பிச் செலுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலரை கொள்ளையிட்டுள்ளனர்.

மார்ச் 2026-இல் அரசாங்கம் இது குறித்து காவல்துறையிடம் முறைப்பாடு பதிவுசெய்துள்ளது.

இந்த கொள்ளை சம்பவத்தையடுத்து அரசாங்க அமைப்புகள் பாதுகாப்பாக இருப்பதையும், பணம் முறையாக நிர்வகிக்கப்படுவதையும் உறுதி செய்யும் நோக்கில் சர்வதேச நாணய நிதியம் இந்த விடயத்தில் அவதானம் செலுத்தி வருகிறது.

சர்வதேச நாணய நிதியம் இந்த விடயத்தில் கவனம் செலுத்த காரணம் என்ன ?

இலங்கை பொருளாதாரம் 2022-ல் பாரிய வீழ்ச்சியடைந்ததோடு இதன் காரணமாக 46 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை எதிர்கொண்டது.

இந்த சந்தர்ப்பத்தில் சர்வதேச நாணய நிதியம் இலங்கையை கைதூக்கி விடும் நோக்கில் 3 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் செலுத்த முன்வந்தது.

இதன் ஒரு கட்டமாக சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து அடுத்த 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை பெறவிருக்கிறது.

இந்த நிலையில் தாம் வழங்கும் பணத்தை பாதுகாக்க கூடிய இயலுமை இலங்கைக்கு தொடர்ந்தும் காணப்படுகிறதா என்ற ஆய்வை மேற்கொள்ளும் நோக்கில் சர்வதேச நாணய நிதியம் இந்த விடயத்தில் அவதானம் செலுத்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here