கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தின் பெரியவிலன் பகுதியில், ஒரு பெண்ணைத் துப்பாக்கி முனையில் மிரட்டியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, யாழ்ப்பாணத்தில் உள்ள இளவாலை பொலிஸாரால் அவர் இன்று கைது செய்யப்பட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுடன் தகராறு செய்த பெண் ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கைது செய்யப்பட்ட அவர் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காணி உரிமை தொடர்பான பிரச்சினையினால் இந்த தகராறு உருவானதாகக் கூறப்படுகிறது.

காணி ஒன்று தொடர்பாக மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது,அந்த காணி எம்.பி. அர்ச்சுனா இராமநாதனுக்குச் சொந்தமானது என நீதிமன்றம் அறிவித்தது.

இருப்பினும், சர்ச்சைக்குரிய அந்த நிலத்தின் ஒரு பகுதிக்கு பெண் ஒருவரும் உரிமை கோரியுள்ளார்.

இந்த நிலையில் சனிக்கிழமையன்று, எம்.பி. அந்த நிலத்தைச் சீர்செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​அங்கு வந்த இரண்டு பெண்கள், அந்த நிலத்தின் ஒரு பகுதியை உரிமை கோரி அவருடன் வாக்குவாதம் செய்தனர்.

இந்த வாக்குவாதம் முற்றியதால், எம்.பி. எதிர்த் தரப்பினரை துப்பாக்கியால் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனுடன், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஒரு பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டமை குறிப்பிகத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here