பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் ஆரம்பகட்ட ஆட்சேபனைகள் தொடர்பில் கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று விசாரணை மேற்கொண்டது.

இதன்போது குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வாதிட்ட யோஷித ராஜபக்ஷ தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் சதி அடிப்படையிலானது எனவும் தான் குற்றமற்றவர் எனவும் குறிப்பிட்டார்.

சதி அடிப்படையிலான குற்றச்சாட்டை நிலைநிறுத்த முடியாது என யோசித்த ராஜபக்ஷவின் சட்டத்தரணிகள் ஆட்சேபித்த நிலையில் , அவர்களது ஆட்சேபனையை உயர் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க நிராகரித்தார்.

குறித்த ஆட்சேபனைக்கு அடிப்படை இல்லை என தீர்ப்பளித்த நீதிபதி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வழிவகுத்தார்.

இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, பகிரங்க நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டது. இதனை தொடர்ந்தே, யோஷித ராஜபக்ஷ தான் குற்றமற்றவர் என வாதாடினார்.

பண பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய இவ்வழக்கு, தற்போது உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட விசாரணைகளுடன் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிராகப் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

2016-ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில், சட்டவிரோதமாகப் பணம் பெற்றுக் கொண்டமை மற்றும் பணமோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு இந்த வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here