களனி மற்றும் வனவாசல ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று (16)ரயில் தடம் புரண்டதில் நான்கு பேர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த பயணிகள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என காவல்துறை தெரிவித்துள்ளது.
ரயில் பெட்டிகளில் ஒன்று தண்டவாளத்தில் கவிழ்ந்ததால், பிரதான வழித்தடத்தில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பொல்கஹாவெலவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இந்த அனர்த்தம் நேர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.







