களுத்துறை அங்குருவதோட்ட, படகொடவில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை இந்த சம்பவத்த்தில் மூன்று பேர் காணாமல் போயுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், ஐம்பத்தொரு (51) நபர்கள் மீட்கப்பட்டதாகவும், ஏழு (07) பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

தீ விபத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், காவல்துறையினர் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளைத் தொடர்வதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here