உக்ரைனில் போர் தொடங்கிய பின்னர் ரஷ்ய ஜனாதிபதி மீது  போர்க்குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளதால்  கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்த நிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது வெளிநாட்டு பயணங்களை கடுமையாக மட்டுப்படுத்தியிருந்தார்.

எனினும்,  இன்று (06) மத்திய கிழக்கு நாடுகளான  சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும், ​​ சவூதி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகளுடன் இருதரப்பு உறவுகளின் மேம்பாடு மற்றும் காஸா போர் தொடர்பாக  ரஷ்ய ஜனாதிபதி கலந்துரையாடுவார் என்றும் ரஷ்ய ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here