தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு நேற்றைய தினம் மாலை யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்றது.

விருந்தினர்கள் மங்கள வாத்தியங்களுடன் வரவேற்கப்பட்டு மங்கள விளக்கு ஏற்றப்பட்டு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.

தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன்  தலைமையில் நடைபெற்ற மாநாட்டில்  பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில்  தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, யாழ் பல்கலைக்கழக அரசியல் துறை தலைவருமாகிய பேராசிரியர் K.T.கணேசலிங்கம், யாழ் மாநகர சபையின் முன்னாள் மேயர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன்,முன்னாள் வட மாகாண கல்வி அமைச்சர்  கந்தையா சர்வேஸ்வரன் கட்சி அமைப்பாளர்கள் ஆதரவாளர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். கலை நிகழ்வுகளும் நிகழ்வை அலங்கரித்தன.

youtube placeholder image

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here