திஸ்ஸமஹாராம கவுந்திஸ்ஸபுர பிரதேசத்தில் உள்ள கற்குழியில் நீரில் மூழ்கி தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு (21.07) தாயின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும், இரு பிள்ளைகளின் சடலங்களை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் திஸ்ஸமஹாராம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கற்குழியில் நேற்று பிற்பகல் 32 வயதான தாய் மற்றும் 14 மற்றும் 9 வயதுடைய இரண்டு சிறுவர்களே நீராட சென்ற நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here