பணம் கோரி முன்னாள் இராணுவ சிப்பாயின் மனைவியைத் தாக்கியதாகக் கூறப்படும்  இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவத்தகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெஹியத்தகண்டிய இராணுவ முகாமில் கடமையாற்றும் 37 வயதுடைய இராணுவ சிப்பாயொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்குள்ளானவர், உயிரிழந்த முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரின் மனைவி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவத்தகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here