ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் இறுதி நிமிடம்வரை பாராளுமன்றத்தை  எந்த நேரத்திலும் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்குள்ளதாக மகிந்த தேசப்பிரியவின் சந்திப்பின் பின்னர் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார்.

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரின் அலுவலகத்திற்கு வருகை தந்து கலந்துரையாடிய பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப்பிரிய முன்னாள் தேர்தல்கள் ஆணைக்குழுவின்  உறுப்பினர் மொகமட் இன்றைய தினம் எமது அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தார்கள்.

இந்நிலையில் நான் அவர்களிடம் ஒரு  கேள்வி கேட்டிருந்தேன்.

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கபட்டால் பாராளுமன்றத்தினை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டா என கேட்டேன் . ஜனாதிபதி தேர்தல் நடாத்தபட்டு தேர்தல் முடிவுகள் வரும்வரை ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளதாக தெரிவித்தார்.

இது முதல் முறையல்ல, முன்பும் இது நடந்துள்ளது ஒருமுறை பிரேமதாச,சிறிமாவோ பண்டாரநாயக்கா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு பிரேமதாச தேர்தலில் வென்று இருந்தார்.

அந்த நேரத்தில் ஜே.ஆர் . ஜெயவர்த்தன பாராளுமன்றத்தினை கலைத்து இருந்தார். பல காரணங்கள் அவருக்கு இருந்தது. கடைசி நிமிடம் வரை அவர் கூறியிருந்தார்.

மேலும் இதற்கு அப்பால் ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாக  பல விடயங்கள் யாழ்ப்பாணத்தில் நடந்து கொண்டு இருக்கிறது எனவும் குறிப்பிட்டிருந்தார் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here