எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கு மக்களுள் பெரும்பான்மையானர்கள் சஜித் பிரேமதாசவுக்கே ஆதரவு வழங்குவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கையில் இதற்கு முன்னரும் ஜனாதிபதி தேர்தல்களின்போது தமிழ் பொதுவேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களால் குறிப்பிட்டுக் கூறும் அளவுக்கு வாக்குகளை பெறமுடியாமல்போனது.

சஜித் பிரேமதாச அனைத்து இன மக்களாலும் ஏற்கப்படும் தலைவர். எனவே, வடக்கு , கிழக்கு மக்கள் கடந்த முறைபோல இம்முறையும் அவருக்கு பேராதரவு வழங்குவார்கள் என்பது உறுதி.

தமிழ்க் கட்சிகளிடம் ஆதரவு பெறுவது தொடர்பில் எமது தலைவரே நேரடி பேச்சில் இறங்கியுள்ளார். தற்போதும் அந்த பேச்சுகள் தொடர்கின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here