எம்பிலிப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொரகொலயாய பகுதியில் கஞ்சா செடிகளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக எம்பிலிப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எம்பிலிப்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் எம்பிலிப்பிட்டிய, தொரகொலயாய பகுதியில் வசிக்கும் 42 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், சந்தேக நபரிடமிருந்து 24,730 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எம்பிலிப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here