முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கேப்பாபிலவு புதுக்குடியிருப்பு வீதியில் கள்ளியடி வயல் வெளிப்பகுதியில் காட்டு யானை ஒன்று உயிரிழந்த நிலையில் இனம் காணப்பட்டுள்ளது.
சுமார் 15 தொடக்கம் 20 ற்கும் இடைப்பட்ட வயதுடைய யானையே இவ்வாறு உயிரிழந்து காணப்படுகின்றது.
யானையின் உயிரிழப்பு தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்ட நிலையில் குறித்த பகுதிக்கு சென்றவனஜீவராசிகள் திணைக்களத்தினர் மற்றும் புதுக்குடியிருப்பு பொலீசார் யானை உயிரிழப்பு தொடர்பிலான விசாரணையினை முன்னெடுத்து வருகின்றார்கள்.
யானையின் உயிரிழப்பிற்கான காரணம் என்ன என்பது பற்றி கண்டறிவதற்காக வனஜீவராசிகள் திணைக்களத்தின் வனவிலங்கு மருத்துவ அதிகாரிகள் குழு பார்வையிட்டு பாரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். இதன் பின்னர் யானையின் உடலம் குறித்த பகுதியில் புதைப்பதற்கு கிராம அலவலகருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here