பின் வீட்டின் முன் மதில் மற்றும்கேற்று கதவுகளை உடைத்துக் கொண்டு வீட்டின் உட்பகுதியில் புகுந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்தை வீட்டு உரிமையாளரின் அனுமதியின்றி அத்துமீறி எடுத்துச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக வீட்டு உரிமையாளருக்கு மனைவியால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக தர்மபுரம் போலீசாருக்கு வீட்டு உரிமையாளர் உடனடியாக தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து விரைந்த போலீசார் தர்மபுர போலீஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாட்டு பகுதியில் டிப்பர் பயணிப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக துரத்திச் சென்ற பொழுது டிப்பர் திருட்டில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் நடுவீதியில் டிப்பர் மற்றும் அவர்கள் பயன்படுத்திய நான்கு மோட்டார் சைக்கிளின் வீதியில் விட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
அப்பகுதியில் இருந்த டிப்பர் மற்றும் நான்கு மோட்டார் சைக்கிளையும் தருமபுர போலீசார் மீட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வீட்டு உரிமையாளர் தெரிவிக்கையில் ,
தர்மபுரம் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தின் தொடர்புடைய சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்து தமக்கு உரிய தீர்வினை பெற்றுத்தர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மேலும் தெரிவிக்கையில் தற்பொழுது தமது வீட்டில் இருப்பதற்கு தான் பெரும் அச்சத்துடன் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தான் எந்தவித குற்ற செயலிலும் ஈடுபடாத நிலையில் தனக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தடயவியல் பொலீசாரும் மேற்கொண்டுவருகின்றனர்.








