பல்வேறு ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கு தமது பேருந்துகள் பயன்படுத்தப்பட்ட போதிலும், வழமையான செயற்பாடுகள் பாதிக்கப்படவில்லை என இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.

பேரூந்து பற்றாக்குறை தொடர்பில் பொதுமக்கள் முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை என தலைவர் லலித் டி அல்விஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

கடினமான மற்றும் கிராமப்புறங்களுக்கு சேவையாற்றும் இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் தேர்தல் பேரணிகளுக்கு ஒதுக்கப்பட மாட்டாது என அல்விஸ் உறுதியளித்துள்ளார்.

தேர்தல் காலம் முழுவதும் பொது வசதிகள் பேணப்படுவதை இலங்கை போக்குவரத்து சபை உறுதி செய்யும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அண்மைய அறிவித்தலுக்கு இணங்க, ஜனாதிபதித் தேர்தலுக்காக பேருந்துகளை வழங்குவதற்கான செலவினங்கள் குறித்த அறிக்கையை இலங்கை போக்குவரத்து சபை சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here