நடிகர் தனுஷின் `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற திரைப்படத்தில் யாத்ரா பாடல் வரிகளை எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என படக்குழு அண்மையில் அறிவித்துள்ளனர்.
இப்பாடலிற்கு `கோல்டன் ஸ்பேரோ’ என்ற தலைப்பு வைத்துள்ளனர்.
இந்நிலையில், இப்பாடலிற்கு தனுஷின் மூத்த மகனான யாத்ரா பாடல் வரிகளை எழுதியுள்ளார். இதுவே இவர் எழுதும் முதல் பாடலாகும்.
இதனால் பாடல் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.








